பெண்களுக்கும் 8 மணி நேர வேலை தர வலியுறுத்தல்
ஈரோடு: பெண்களுக்கு ஒரு நாளுக்கு 8 மணி நேர வேலை மற்றும் தொழிற்சங்க உரிமையை வலியுறுத்தி நவம்பர் 23 ல் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பட்டம் நடத்த உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் 8 வது மாநில மாநாடு அக்டோபர் 5 முதல் 7ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழுவின் அகில இந்திய அமைப்பாளர் டாக்டர் கே.ஹேமலதா, சிஐடியு மாநில பொது செயலாளர் அ. சவுந்தரராசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதனையடுத்து, இந்த அமைப்புக்கு, மாநில கன்வீனராக மாலதி சிட்டிபாபு-வும், இணை அமைப்பாளர்களாக டி.எ.லதா, வி.பி.இந்திரா, எம்.ராஜீ, எம். பகவதி, கே. தமிழரசி, எம்.மகாலட்சுமி, எம். தனலட்சுமி, எம். கிரிஜா ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாட்டில், பெண்கள் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஜவுளி, கட்டுமானம், மீன்பிடி மற்றும் கணிணி தொழில்நுட்ப மையங்களிலும், அமைப்புசாரா துறையிலும் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு, 8 மணி நேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து பணி தளங்களிலும் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
மேலும், வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய ஆணையை வெளியிட வேண்டும். உடலுழைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட 14 நலவாரிய செயல்பாடுகளை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும், பெண்களுக்கு ஒரு நாளுக்கு 8 மணி நேர வேலை மற்றும் தொழிற்சங்க உரிமையை வலியுறுத்தி நவம்பர் 23 ல் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பட்டம் நடத்துவது என்று பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications