வாக்களித்த பின்னர் ரசீது அளிக்கும் திட்டம்-பரிசீலனை செய்ய குழு அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை : மின்னணு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் யாருக்கு தாங்கள் வாக்களித்தோம் என்பது தொடர்பாக ரசீது அளிக்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்ய மூவர் கொண்ட குழு ஒன்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த இந்திரேசன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு வாக்காளர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து ரசீது பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆராய்வார்கள். தங்களது ஆய்வு முடிவை தேர்தல் ஆணையத்திடம் இக்குழு அளிக்கும். அதைப் பரிசீலித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை சென்னையில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications