தமிழகத்தில் ஜனநாயக உரிமைகளுக்குப் பேராபத்து-வைகோ

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று இரவு, லால்குடியில் ஆலயத்தில் சமயச் சொற்பொழிவுக்காகப் பயணித்துக் கொண்டு இருந்த போது, வழியிலேயே அவரை போலீசார் கைது செய்தனர்.
இதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய, சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்ததற்கு, மன்மோகன் சிங் அரசை இயக்கிக் கொண்டு இருக்கும் சோனியா காந்திதான் காரணம் .
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதையும், சுட்டுக் கொல்வதையும் தடுக்க எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை எல்லாம் சுட்டிக் காட்டி, சோனியா காந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக, அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டு உள்ளார். அதே போன்று இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பேச்சு உரிமையைப் பறிக்கின்ற பாசிச நடவடிக்கைகளில் கருணாநிதி அரசு, காவல்துறையைப் பயன்படுத்தி வருகின்றது.
ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு ஜனநாயக உரிமைகளை நசுக்க முயன்ற எதேச்சாதிகாரிகள், மக்கள் சக்தியால் துhக்கி எறியப்பட்டனர் என்பதுதான் வரலாறு.
அர்ஜூன் சம்பத்தைக் கைது செய்ததைகக் கண்டிப்பதுடன், அவரையும், இந்து மக்கள் கட்சியினரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தி.மு.க. அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஆர்த்து எழுந்து போராட வேண்டியது ஒரு முக்கியமான கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications