பாக். சூழல் எரிமலை போல உள்ளது-எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்: விமானப்படை தளபதி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து காஸியாபாத்தின் ஹின்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பாகிஸ்தானின் நிலைமை வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலை போல உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அது வெடிக்கலாம்.
அப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும். அதை சமாளிக்கவும், முறியடிக்கவும் இந்திய விமானப்படையினர் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.
விமானப்படையினரின் திறமையை சோதிக்கும் வகையில் அது அமையலாம். அப்படிப்பட்ட சமயத்தில் மின்னல் வேகத்தில் செயல்படக்கூடிய வகையில் நாம் இருந்தாக வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் வீரர்கள் செயல்பட்டாக வேண்டும்.
இந்த எரிமலை 100 ஆண்டுகள் கழித்தும் வெடிக்கலாம், நாளையே கூட வெடிக்கலாம் என்றார் நாயக்.












Click it and Unblock the Notifications