ஈழத் தமிழர்களை முழுமையாக மறுகுடியமர்த்த வேண்டும்-சோனியாவிடம் கருணாநிதி கோரிக்கை

புதுச்சேரி, திருச்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி இன்று பிற்பகல் சென்னை வந்தார். அவரை விமான நிலையம் சென்று முதல்வர் கருணாநிதி சந்தித்து வரவேற்றார்.
அவருடன் மனைவி தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
பின்னர் சோனியாவிடம் மனு ஒன்றை அளித்தார் கருணாநிதி. அதில், முள் வேலி முகாமில் உள்ள தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
சோனியாவுடனான சந்திப்புக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி சோனியா காந்தியிடம் ஆலோசித்தேன். அகுறித்து மனு ஒன்றையும் அவர்களிடம் அளித்துள்ளேன். இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தீர்வு காண தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதாக சோனியா உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications