பெங்களூரில் மரங்கள் கணக்கெடுப்பு தொடக்கம்

மரங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் நிறைந்த மாநகர் பெங்களூர். இருப்பினும் இதெல்லாம் பழங்கதையாகி விட்டது. இருபுறமும் அடர்த்தியான மரங்கள் நிறைந்த அவென்யூக்களைக் கொண்ட மாநகராக ஒருகாலத்தில் பெங்களூர் விளங்கியது. ஆனால் இந்த அவென்யூக்கள் எல்லாம் இப்போது மறைந்து போய் விட்டன.
இருக்கிற மரங்களும் கூட குறைந்து கொண்டே வருகின்றன. கான்க்ரீட் காடாக மாறிப் போய்க் கிடக்கிறது பெங்களூர். இந்த நிலையில் இருக்கிற மரங்களைக் காக்கவும், பெங்களூர் நகரின் மர வளத்தை அதிகரிக்கவும் மாநகராட்சி களத்தில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ரூ. 1 கோடி செலவில் மரங்கள் குறித்த கணக்கெடுப்பை மாநகராட்சி நடத்தவுள்ளது. மாநகராட்சியின் வனப் பிரிவும், சப்னா என்ஜிஓ அமைப்பும் இணைந்து, ஜிஐஎஸ் முறையைப் பயன்படுத்தி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளன.
மரங்களின் எண்ணிக்கை, அவற்றின் உயரம், அடர்த்தி உள்ளிட்டவை அளவிடப்பட்டு கணக்கிடப்படவுள்ளது.
இதில் பெருமளவிலான மாணவ, மாணவியர் உள்ளிட்ட வாலன்டியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மரங்கள் கணக்கெடுப்பு குறித்த ஐடியாவை தெரிவித்தவர் விஜய்பாபு என்ற 2ம் ஆண்டு பொறியியல் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் சோதனை ரீதியாக ஹம்பிநகர் வார்டு பகுதியில் உள்ள மரங்களை கணக்கிட்டு தெரிவித்தார். இதையடுத்து தற்போது பெங்களூர் மாநகரம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications