ராப்ரி தேவியின் சொத்துக் கணக்கு-62 பசு மாடுகளும், 42 கன்றுக் குட்டிகளும்!

பீகார் சட்டசபைத் தேர்தலில் சோனேபூர், ரகோபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் ராப்ரி. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அவர் அத்துடன் தனது சொத்துக் கணக்கையும் தெரிவித்துள்ளார். அதில்தான் இவ்வாறு கூறியுள்ளார் ராப்ரி.
இந்த பசு மாடுகளும், கன்றுக் குட்டிகளும், லாலு பிரசாத் யாதவுக்குச் சொந்தமான தானாபூரில் உள்ள பண்ணையில் அடைத்து வைத்து பராமரித்து வருகிறாராம் ராப்ரி.
இதுபோக ரூ. 7.62 லட்சம் மதிப்பிலான நகைகள் வைத்திருக்கிறார் ராப்ரி. வங்கியில் ரூ.2.29 லட்சம் பணத்தைப் போட்டு வைத்துள்ளார். பான்டுகள் மூலம் ரூ. 11.78 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
அவருடைய அசையாச் சொதுக்கள் பாட்னா, கோபால்க்ன்ச்சில் உள்ள விவசாய மற்றும் விவசாயம் சாராத நிலங்களாக காட்டப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு பல கோடியாக கூறப்பட்டுள்ளது.
லாலு, ராப்ரிக்கு ஆடு, மாடுகள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதிலும் மாடுகள் என்றால் லாலுவுக்கு மிக மிகப் பிடித்தமான விஷயமாகும்.
லாலு முன்பு முதல்வராக இருந்தபோது அவரது அதிகாரப்பூர்வ வீட்டில் நூற்றுக்கணக்கான மாடுகளைப் போட்டு நிரப்பி வைத்திருந்தார். அவற்றில் முக்கால்வாசி மாடுகள் பசுக்கள் ஆகும். ஆனால் 2005ல் ராப்ரி தேவி ஆட்சியை இழந்த பின்னர் அந்த வீட்டை விட்டு லாலு குடும்பத்தினர் 'பத்தி' விடப்பட்டனர். இதையடுத்து தனது மாடுகளை தானாபூரில் உள்ள பண்ணைக்கு மாற்றினார் லாலு என்பது நினைவிருக்கலாம்.
ராப்ரி தேவி 1997 முதல் 2005ம் ஆண்டு வரை பீகார் முதல்வராக இருந்தார். அவர்தான் அந்த மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 21ம் தேதி தொடங்கி நவம்பர் 20ம் தேதி வரை ஆறு கட்டமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications