வளர்ச்சி குறைந்த நாடு என்று கூறியதற்காக மலாவியிடம் மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்

அக்டோபர் 3ம் தேதி காமன்வெல்த் போட்டி தொடக்க விழா டெல்லியில் கோலாகலமாக நடந்தது. அப்போது மலாவி நாடு குறித்து கூறுகையில், தூர்தர்ஷன் வர்னணையாளர் ஒருவர் உலகிலேயே மிகவும் வளர்ச்சி குறைந்த நாடு என்று வர்ணித்தார்.
இதற்கு மலாவி நாடு கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரதமர் அலுவலகமும், இந்தியத் தூதரகமும் தலையிட்டன.மலாவியிடம் மன்னிப்பு கேட்குமாறு அவை தூர்தர்ஷனுக்கு உத்தரவிட்டன. இதையடுத்து தூர்தர்ஷன் இயக்குநர் ஜெனர் அருணா சர்மா, மலாவி தூதர் கிறிஸி சவாஞ்சேவுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், தூர்தர்ஷன் வர்னணையாளர் கூறிய கருத்து எந்தவித உள்நோக்கமும் இல்லாதது, எதார்த்தனமானது, அவதூறானது அல்ல. இருப்பினும் இந்தக் கருத்துக்காக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக அருணா சர்மா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உகாண்டா நாடு காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்கள் மீது கடும் கோபத்துடன் உள்ளது. அந்த நாட்டு அதிகாரிகள் சென்ற கார், விபத்துள்ளானதால் இந்த அதிருப்தியில் அது உள்ளது. தற்போது மலாவியும் அப்செட்டாக்கியுள்ளது.
இது இந்தியாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் இந்தியா போட்டியிடுகிறது. இதில் வெற்றி பெற ஆப்பிரிக்க நாடுகளின் உதவியை இந்தியா எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாடுகள் அப்செட்டாகியுள்ளது இந்தியாவை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் மலாவி அதிபர் நவம்பர் 3ம் தேதி இந்தியா வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications