மகாத்மாவுக்குப் பிறகு சோனியாதான் பிரதமர் பதவியை உதறியவர்-திருநாவுக்கரசர்

திருச்சியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் இருந்து இந்த நிகழ்ச்சியில் என்னோடு இணைய வந்து உள்ள ஆதரவாளர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற ஆண்டு சோனியாகாந்தி ஆசியோடும், இந்த நாட்டின் அடுத்து பிரதமராகும் தகுதியுடைய ராகுல்காந்தியின் ஆசியோடும் காங்கிரசில் இணைந்தேன். இணையும் போது நான் வைத்த ஒரே வேண்டுகோள். இணைப்பு விழாவுக்கு வருகை தர வேண்டும்.
காங்கிரஸ் வரலாற்றில் மகாத்மா காந்திக்கு பிறகு பிரதமர் பதவியை வேண்டாம் என்று ஒதுக்கியவர் சோனியா காந்தி மட்டும் தான். காங்கிரஸ் மேலும், மேலும் வளர்ந்து வருகிறது. மகிழ்ச்சியோடு 125-வது ஆண்டு விழா கொண்டாடுகிறோம்.
தொடர்ந்து 4-வது முறையாக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வகிக்கும் ஒரே தலைவர் சோனியா காந்திக்கு பாராட்டு விழா, அடுத்த தனது ரத்தத்தை சிந்தி, இந்த பூமியை ரத்த பூமியாக மாற்றிய தியாக தலைவர் ராஜீவ்காந்தி பிறந்த தினவிழா, இதில் 4-வது விழாவாக நான் காங்கிரசில் இணையும் விழா ஆகிய விழாக்கள் நடக்கிறது.
1967-க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. பிற கட்சியாக இருந்தால் காணாமல் போய் இருக்கும். எதிர்காலத்தில் சோனியாவுக்கு முன்னால் சபதம் ஏற்போம். ராஜீவ்காந்தி ரத்த சிந்திய பூமியில் இருந்து சபதம் ஏற்போம். வருகிற தேர்தலில் கூட்டணி. அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றார் திருநாவுக்கரசு.
மகாத்மா காந்திக்குப் பிறகு பிரதமர் பதவியை வேண்டாம் என உதறியவர் சோனியா காந்திதான் என்று கூறியுள்ளார் திருநாவுக்கரசு. ஆனால் பெருந்தலைவர் காமராஜர் கூட தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டவர் என்று நமக்கு ஞாபகம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications