நெல்லை, தூத்துக்குடியில் தேங்காய் விலை விர்ர்!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தி்ல் இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இது தவிர பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேங்காய்கள் வருவதுண்டு. தற்போது கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் தேங்காய்கள் பறிக்கும் பணி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது தேங்காய்கள் காய்க்கும் காலம் என்பதால் தேங்காய் பறிக்கும் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேங்காய்கள் வரத்தில் ஐந்தில் ஒருபங்காக குறைந்து விட்டது.
தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் கொப்பரைகளை அதிகளவில் கொள்முதல் செய்து விடுகின்றன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால் அத்தொழிற்சாலைகள் உற்பத்தி அளவையும் அதிகரித்துள்ளன. வழக்கமான தேவையை விட கொப்பரை தேங்காய்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் தூத்துக்குடியில் உள்ள மார்க்கெட்டுகளில் தேங்காய்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மக்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தேங்காய்கள் விலை கடந்த ஒரு மாதத்தில் 3 மடங்காக அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பல இடங்களிலும் தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முன்பு ரூ.3க்கு விற்ற தேங்காய் தற்போது ரூ.6 முதல் 6.50 வரை விற்கப்படுகிறது. பெரிய மற்றும் சிறிய ரகத்துக்கு ஏற்றவாறு விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. உழவர் சந்தையில் கிலோ ரூ.13க்கு விற்கப்பட்ட தேங்காய் ரூ.18 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் உணவு பதார்த்தங்களில் தேங்காயை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications