அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய சபாநாயகர்-குமாரசாமி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

Kumarasamy
பெங்களூர்: கர்நாடக சட்டசபை சபாநாயகர் போபய்யா தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஆட்சியை காப்பாற்ற முயற்சித்துள்ளார். என்று முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவருமான குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்ததில் முக்கிய பங்கு வகித்த குமாரசாமி நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து கூறுகையில்,

நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெறவில்லை. 16க்கும் மேற்பட்ட பாஜக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து, போதிய ஆதரவே இல்லாத நிலையில் அரசு வெற்றி பெற்று விட்டதாக சபாநாயகர் போபய்யா அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு செல்லாது.

இதில் சபாநாயகர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆட்சியை காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதை சட்டரீதியாக எதிர்ப்போம்.

எதியூரப்பா நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்ததே சட்டவிரோதமான செயல். அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நம்பிக்கை தீர்மானத்தை குரல் ஓட்டெடுப்புக்கு விட்டுள்ளனர்.

இந்த முடிவு செல்லாது. இந்த சட்ட விரோத பாஜக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதில் மத்திய அரசும், ஜனாதிபதியும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றார்.

இது குறித்து முன்னாள் பிரதமர் தேவ கெளடா கூறுகையில், சட்டசபையி்ல் நடந்தது ஜனநாயகப் படுகொலை. இவ்வளவு கேவலமான ஒரு அரசை நான் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை. ஊழல்களில் உழன்று வரும் இந்த அரசு, இப்போது மோசடி மூலம் மெஜாரிட்டியை நீரூபிக்க முயன்றுள்ளது. இந்த அரசை உடனே கலைக்க வேண்டும் என்றார்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா கூறுகையில், இன்று சட்டசபை நடவடிக்கை அனைத்தும் சட்டத்துக்கு விரோதமாக நடந்தவை தான். எனவே கர்நாடக அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+