தமிழகத்தில் 75 தொகுதிளில் வேட்பாளர்கள் தயார் ! - சொல்கிறார் கரு. நாகராஜன் !
உசிலம்பட்டி : வரும் சட்ட மன்ற தேர்தலில் 75 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயராக உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் , சமத்துவ மக்கள் கட்சியின் பொது செயலாளர் கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்ற தேர்தல் வர உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சத்துவ மக்கள் கட்சி பொது கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 18 ம் தேதி தூத்துக்குடியில் நடந்த முப்பெரும் விழா மூலம் தொண்டர்களிடம் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அடுத்து, அக்டோபர் மாதம் 24 ம் தேதி வள்ளியூர் திருவள்ளூவர் திடலில் பொதுக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் தலைவர் சரத்குமார் பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து ஆலங்குளம், கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதனால் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிற சக்தி எங்களுக்கு உள்ளது. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இது வரை முடிவு செய்யவில்லை.
இருப்பினும், கூட்டணி குறித்து முக்கிய முடிவு விரைவில் வெளியிட்டப்படும். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. தற்போது, 75 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
ஆலங்குளம், குமரி, தூத்துக்குடியில் தலைவர் சரத்குமார் போட்டியிட நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் போட்டியிடும் தொகுதி முடிவு செய்யவில்லை, என்றார் நாகராஜன்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications