நிலத் தகராறு-பள்ளி மாணவனை வெட்டிக் கொன்ற தலையாரி
நெல்லை: நெல்லை அருகே நிலத் தகராறில் பள்ளி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக தலையாரி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த உயக்காட்டானின் மகன் அய்யா பிள்ளை (16). இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த உயக்காட்டான். இவர்
மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து 3 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார்.
ஆனால், அந்த நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கங்கைகொண்டானை சேர்ந்த தலையாரியான பாலு, சுப்பிரமணி, வெண்கிழவன், முருகன், கணபதி ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
உயக்காட்டான் நிலத்தை வாங்கினாலும் இந்த நிலத்தில் நாங்கள்தான் விவசாயம் செய்வோம் என்று இவர்கள் கூறியுள்ளனர். இதனால் உயக்காட்டானுக்கும் இந்த 5 பேருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உயக்காட்டானுக்கு அவரது மகன் அய்யா பிள்ளை சாப்பாடு கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
கங்கைகொண்டான் புறவழிசாலை பாலம் அருகே வந்த அவரை பாலு உள்ளிட்ட 4 பேர் கொண்ட வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றது.
அவர்களிடமிருந்து தப்பியோடிய அய்யா பிள்ளையை இந்தக் கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications