தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை ராஜாவை வைத்திருக்க திமுக கோரிக்கை?

ரூ. 60,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜா மீது சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ராஜாவுக்கு சாதகமாக இருக்காது என்று கருதப்படுகிறது.
இந்த வழக்கில் அக்டோபர் 22ம் தேதி விசாரணை வருகிறது. அப்போது மத்திய அரசு உறுதியான பதிலைத் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜா மீது இப்போதைக்கு குறிப்பாக தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைமையையும், மத்திய அரசையும் திமுக வலியுறுத்தியிருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணையை முடிக்க 6 மாத கால விசாரணை நீட்டிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது சிபிஐ. இது திமுக ஆதரவு நிலையாக பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் திடீரென அது 6 மாத கால நீட்டிப்பைக் கோரியிருப்பது எதிர்க்கட்சிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications