அமெரிக்கா மற்றும் சைப்ரஸ் அறிஞர்கள் மூவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு!
Subscribe to Oneindia Tamil

இதற்கான அறிவிப்பை நோபல் பரிசுக்கான தேர்வுக்குழு திங்கள்கிழமை வெளியிட்டது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஏ டைமண்ட் (70), வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேல் டி மார்டன்சென் (71), பிரிட்டனில் உள்ள 'லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' மையத்தின் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஏ பிஸரைட்ஸ் (62) ஆகிய 3 பேரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இம்மூவருமே லேபர் மார்க்கெட்டிங் எகனாமிக்ஸில் நிபுணர்கள். பொருளாதார கொள்கைகள் எந்த அளவிற்கு வேலை வாய்ப்பின்மையை உருவாக்கிறது என்பது குறித்தும், அதற்குத் தீர்வு காணும் வகையிலும் வெளியிட்ட ஆய்வு முடிவுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications