சட்டசபைத் தேர்தலுக்கான போரை மதுரையில் தொடங்குகிறார் ஜெ.-பொள்ளாச்சி ஜெயராமன்

மதுரை அதிமுக போராட்டம் தொடர்பான செயல்வீரர்கள் கூட்டம் கோவையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,
வரும் 18ஆம் தேதி மதுரையில் ஜெயலலிதா தலைமையில் நடக்கவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக இருக்கும்.
மதுரை மண்ணில்தான், எம்.ஜி.ஆர்., உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். அங்கேதான், தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை அறிமுகம் செய்தார். அந்த மண்ணிலிருந்துதான் முதன் முறையாக, சட்டசபைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாக, அவர் வலம் வந்தார். இப்போது, அந்த மதுரையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான், அதே மதுரை மண்ணில் அடுத்த தேர்தலுக்கான போரை ஜெயலலிதா துவங்கவுள்ளார்.
இப்போது துப்பாக்கி ஏந்திய போலீசாரின் உதவியோடு, மதுரையில் ரவுடித்தனம் செய்பவர்கள், ஓடி ஒளிய வேண்டிய நாள் விரைவில் வரும். ஒரு லட்சம் அழகிரிகள் வேலை பார்த்தாலும், ஓட்டுக்கு ஒரு சவரன் கொடுத்தாலும் இடைத்தேர்தலைப் போல, பொதுத்தேர்தலில் ஜெயிக்க முடியாது.
அ.தி.மு.க.வினால் வாழ்வு பெற்றவர்கள், பணத்தைச் செலவழித்து, ஆட்களைக் கூப்பிட்டு வர வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் அனுப்பும் பேருந்திலாவது மதுரைக்கு வர வேண்டும்.
மதுரையில் மூன்று இடைத்தேர்தல்களில் நாம் அடி வாங்கியிருக்கிறோம். ரத்தம் சிந்தியிருக்கிறோம். எம்.ஜி.ஆர்., பாணியில், நாம் அதை வட்டியும், முதலுமாகத் திருப்பித்தர வேண்டும். மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டம், அழகிரிக்குத் தரப்படும் நேரடி பதிலடியாக இருக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications