மன்னார்குடி அருகே கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு தீ வைப்பு - பதட்டம்
மன்னார்குடி: மன்னார்குடி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் பழைய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருவிழா நடந்தது.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வடிவேல் என்பவர் விழாவுக்கு வருபவர்களை வரவேற்று பேனர் வைத்திருந்தார். அந்த பேனரை யாரோ கிழித்துவிட்டனர். இது குறித்து திருமக்கோட்டை போலீசில் வடிவேல் புகார் செய்தார்.
இதற்கு அதே பகுதியில் வசிக்கும் அன்புசெல்வன், அவரது மகன் விஜயன், கணேசன் மகன் முருகானந்தம் ஆகியோர் தான் காரணம் என வடிவேல் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் விஜயன், தனது தாய் மலர்கொடியை பைக்கில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் முத்தையா, புகழேந்தி ஆகியோர் மீது பைக் உரசிச் சென்றது. இதனால் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து விஜயன் அவரது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தார்.
மேலும், புகழேந்தி வீட்டை அடித்து நொறுக்கியதுடன், கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு எதிர் வீட்டில் இருந்த சதீஷ் என்பவரது பைக்கையும் அடித்து நொறுக்கினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் ஏ.டி.எஸ்.பி. உமையாள், மன்னார்குடி டி.எஸ்.பி. குணசேகரன், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தவர்களை கைது செய்யக் கோரி ராதாநரசிம்மபுரத்தில் கட்சிக்காரர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மன்னார்குடி தாசில்தார் முருகானந்தம் சமாதானம் செய்து அனுப்பினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications