பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் பட்டியல்-நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம்
மதுரை: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
பன்றிக் காய்ச்சல் நாடு முழுவதும் 2வது முறையாக வேகமாகப் பரவி வருகிறது. முதல் பரவலில் விட்டுப் போன மாநிலங்கள் தற்போதைய பரவலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. நாட்டிலேயே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.
பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட ஒவ்வொரு 100 இந்தியர்களிலும், 22 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெறும் 4 சதவீதமாகவே இருந்தது. ஆனால் தற்போது அதை விட ஐந்து மடங்கு அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 11ம் தேதி வரை 1155 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 249 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவிக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து பிரிவு இயக்குநர் பொற்கைப்பாண்டியன் கூறுகையில், வானிலை மாற்றம்தான் தமிழகத்தில் அதிக அளவில் பன்றிக் காய்ச்சல் பரவக் காரணம். பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவுவதற்கு இதமான தட்பவெப்ப நிலை மிகவும் சாதகமானதாக உள்ளது. தற்போது தமிழகத்தில் அந்த தட்பவெப்ப நிலை வரத் தொடங்கியுள்ளதால் பரவலும் அதிகமாக உள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications