நாட்டின் பணவீக்கம் கிடுகிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் மாதாந்திர பணவீக்கம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 8.51 சதவீதமாக மாதாந்திர பணவீக்கம் இருந்தது. இது கிடுகிடுவென உயர்ந்து செப்டம்பர் மாதத்தில் 8.62 சதவீதமாக இருந்தது.
அதேபோல உணவுப் பணவீக்கம், அக்டோபர் 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 16.37 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்திய வாரம் அது 16.24 சதவீதமாக இருந்தது.
பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயம் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அதை சமாளித்து கரையேறுவது என்பது சற்று சிரமமான விஷயம்தான் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications