பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூர்: பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வளாகத்திற்குள் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து வெடிகுண்டு கண்டுபிடிக்கும் குழுவினர் விரைந்து வந்து அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
சம்பவத்தின்போது கமிஷனர் சங்கர் பிதரி அலுவலகத்தில்தான் இருந்தார். அவரை பாதுகாப்பு கருதி அங்கிருந்து போகுமாறு வெடிகுண்டு நிபுணர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் நான் இங்கிருந்து போக மாட்டேன். நீங்கள் சோதனை செய்யுங்கள் என்று கூறி விட்டார். சொன்னபடியே தனது அறையை விட்டு அவர் அகலவில்லை.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெடிகுண்டு மிரட்டில் புரளி என்று தெரிய வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.
மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி ஒரு மொபைல் போன் என்பதும், பரப்பன அக்ரஹாரத்திலிருந்து அது வந்ததும் தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications