ஜவுளி வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய துணை முத்திரை ஆய்வாளர் கைது
கரூர்: ஜவுளி வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய துணை முத்திரை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் மோகன் (54). ஜவுளி நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் கழிவுத் துணிகளை எடைக்கு வாங்கி அதை மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடையில் உள்ள எடைத்தராசினை ஆய்வு செய்து முத்திரை அளிக்க, கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட துணை முத்திரை ஆய்வாளர் விஜயன் (49), ரூ. 1,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து ஜவுளி வியாபாரி மோகன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி கரூர் தொழிலாளர் அலுவலகத்தில் துணை முத்திரை ஆய்வாளர் விஜயனிடம் மோகன் ரூ. 1000 லஞ்சம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. அம்பிகாபதி மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்பு, அவரை கரூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சர்வமங்களா முன்பு ஆஜர்படுத்தி கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications