2 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு மின் இணைப்பு-முதல்வர் கருணாநிதி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் விவசாய பம்புசெட்டுகளுக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள 2 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் 40 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் அளிக்கப்படுகின்றன. இப்போதைய நிலவரப்படி, விவசாய மின் இணைப்பு கோரி சுமார் 4 லட்சத்து 5 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் வீதம் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் இணைப்பு வழங்க குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
விவசாயிகளின் நலன் கருதி, 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி முதல் 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2010 டிசம்பர் மாதத்திற்குள்ளும், அடுத்த 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2011 மார்ச் மாதத்திற்குள்ளும், அதற்கடுத்த 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2011 ஜூன் மாதத்திற்குள்ளும், எஞ்சிய 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2011 செப்டம்பர் மாதத்திற்குள்ளும் மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications