தமிழக அமைச்சர் முன்பு தீக்குளிக்கப் போவதாக மிரட்டல்: திமுக செயலாளர் கைது
Subscribe to Oneindia Tamil
திருப்பூர் : தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் முன்பு தீக்குளிக்கப் போவதாக மிரட்டிய திமுக செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (52). 10 வது வார்டு முன்னாள் திமுக செயலாளர்.
சாமிநாதபுரத்தில் திமுக கிளை அலுவலகத்தை தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் திறந்து வைத்தார்.
அப்போது கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறி அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் தீக்குளிக்கப் போவதாக அவர் முடிவு செய்தார்.
தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் அங்கமுத்துவை கைது செய்தனர்.
விழா முடிந்து அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சென்ற பின்பு அவரை போலீசார் விடுதலை செய்தனர்.












Click it and Unblock the Notifications