'படபடக்க' வைக்கும் பட்டாசு விலை!

தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளன. எண்ணெய், வெல்லம், சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையுமே மக்களை வாட்டி வதைக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. ஒரு சாதாரண குடும்பம் கூட ரூ 5000 இல்லாமல் தீபாவளி கொண்டாட முடியாத நிலை.
தீபாவளி என்று வந்தாலே, பட்டாசுதான் பிரதான இடம் வகிக்கும்.
ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சாணிக் கொம்பு விலையை நிர்ணயித்துள்ளன பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள்.
அனைத்து ரக பட்டாசுகளுக்குமே, போன வருடத்தைக் காட்டிலும் 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் புதிய ரகங்களும் இந்த ஆண்டு அறிமுகமாகவில்லை. எனவே பட்டாசு வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்துள்ளது.
வழக்கமான பட்டாசு ரகங்களான சரவெடி, கம்பி மத்தாப்பு, லட்சுமி வெடி, புஸ்வானம், சக்கரம், குண்டுகள் போன்றவற்றின் விலை 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ 125 முதல் 2000 வரையிலான கிஃப்ட் பேக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
அதேநேரம் சீனைாவிலிருந்து புதிய ரக பட்டாசுகளை இறக்குமதி செய்கின்றனவாம் சில நிறுவனங்கள். இந்தப் பட்டாசுகள் வந்தால் ஒருவேளை விலை குறையலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications