பெரியார் தி.க.-வை தடை செய்ய வேண்டும்!: இந்து மக்கள் கட்சி
கோவை : பெரியார் திராவிடர் கழகம் அமைப்பை தடை செய்ய வேண்டுமென, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தர்மராஜ் வேண்டும் என்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை வனம்மையாக கண்டிப்பதோடு, சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.
மேலும், தி.மு.க. அரசுக்கு தேர்தல் நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம்.
தர்மராஜை விடுதலை செய்யக் கோரியும், திண்டுக்கல் மலைக்கோவிலில் அபிராமி அம்மன் சிலை வைத்து வழிபட அனுமதிக்கக் கோரியும், சிறப்பு வழிபாடுகளும், துறவியர் கருத்தரங்கமும், ஆன்மிக அமைப்புகளின் மாநாடும், கிரிவல நிகழ்ச்சியும் நவம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
ஆயுத பூஜை கொண்டாடிய மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, காவலர்களைத் தாக்கி, ஒயர்லெஸ் உள்ளிட்ட பொருட்களை நாசப்படுத்தியுள்ள பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications