குலசையில் 2 பெண்கள் தற்கொலை : இறந்தவர்கள் யார் என்று தெரியவில்லை
உடன்குடி: குலசேகரபட்டிணம் கடற்கரையில் நேற்று காலை 2 பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
குலசேகரபட்டிணத்தில் தசரா விழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள கடற்கரையில் கூடியிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கோவிலுக்குத் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் அருகில் இரு பெண்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த பக்தர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இறந்த பெண்களுக்கு சுமார் 35 வயது இருக்கும். ஒரு பெண் கருப்பு நிறத்தில் ரோஸ்கலர் பூபோட்ட சேலையும், மற்றொரு பெண் பிரவுன் கலர் சேலையும் அணிந்திருந்தனர். இவர்கள் யார், எதற்காக இங்கு வந்து தற்கொலை செய்தார்கள், சகோதரிகளா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications