நிதீ்ஷ்குமாரே மீண்டும் ஜெயிப்பார் - கருத்துக் கணிப்பு முடிவுகள்

பீகார் மாநில சட்டசபை தேர்தல் 6 கட்டங்களாக நடக்கிறது. தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம்- பாரதீய ஜனதா ஒருஅணியாகவும், லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. 47 தொகுதிகள் வாக்குப்பதிவை சந்திக்கின்றன.
அடுத்து 2-வது கட்ட தேர்தல் 24-ந்தேதியும், 3-வது கட்ட தேர்தல் 28-ந்தேதியும், 4-வது கட்ட தேர்தல் நவம்பர் 1-ந்தேதியும், 5-வது கட்ட தேர்தல் நவம்பர் 6-ந்தேதியும், 6-வது கட்ட தேர்தல் நவம்பர் 20-ந்தேதியும் நடக்கின்றன.
நாளை மறுநாள் தேர்தல் நடக்கும் 47 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஒய்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடக்கும் சில தொகுதி களில் நக்சலைட்டு ஆதிக்கம் அதிகம் உள்ளது. எனவே அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் டி.வி. நிறுவ னம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தி உள்ளது.
அதில், ஐக்கிய ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி 243 தொகுதிகளில் 170 இடங்களுக்கு மேல் பிடித்து அமோக வெற்றியை பெறும் என்று தெரிய வந்துள்ளது.
முதல்வர் நிதிஷ்குமாரின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதால்தான் இவ்வளவு பெரும் வெற்றி கிடைக்க இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.
கடந்த தேர்தலில் இந்த கூட்டணி 143 இடங்களைத்தான் பிடித்தது. இப்போது கூடுதலாக 27 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது.
அதே நேரத்தில் லாலு பிரசாத்- ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணி பெரும் சரிவைச் சந்திக்கும் என தெரிய வந்துள்ளது.
கடந்த தேர்தலில் இவர்கள் கூட்டணி 64 இடங்களை பிடித்து இருந்தது. ஆனால் இப்போது 34 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 இடங்களை மட்டுமே பிடித்து இருந்தது. இப்போது ராகுல்காந்தி பிரசாரம் போன்றவற்றால் சற்று செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது.
எனவே 22 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிகிறது.
இந்தக் கருத்து கணிப்பை மாநிலம் முழுவதும் மொத்தம் 21 ஆயிரத்து 640 பேரிடம் எடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications