திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும்-10 முறை கோரிய கார்த்தி சிதம்பரம்

திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்போது பத்து முறை கூறினார் கார்த்தி சிதம்பரம்.
ப.சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான் இல்லத் திருமணம் இன்று காலை சிதம்பரத்தில் நடந்தது. இதில் கார்த்தி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கூறுகையில், காங்கிரஸ் கட்சி 125 வருட பாரம்பரியமிக்கது. அந்த கட்சியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. காங்கிரஸ் தயவால் எம்.பி.யான திருமாவளவன் அந்த கட்சியை விமர்சிக்கிறார்.
வேண்டுமென்றால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமர்சிக்கட்டும். இலங்கைக்கு சென்று ராஜபக்சேவுடன் டீ-வடை சாப்பிட்டு விட்டு வேறு எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு, இங்கே வந்து கடுமையாக விமர்சிக்கிறார். நேருக்கு நேர் அங்கேயே பேச வேண்டியதுதானே.
கலைஞருக்கு இவர் ஆலோசனை கூறுகிறார். காங்கிரஸை விட்டு விலகுவோம் என்று கலைஞருக்கு இவர் ஆலோசனை கூறவேண்டியதுதானே. அப்படி கூறினால்தான் கலைஞர் ஏற்றுக்கொள்வாரா.
இவர் எம்.பியாவதற்கு காரணம் காங்கிரஸ்தான். பதவி மட்டும் வேண்டும்; அப்பதவி வருவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி மட்டும் வேண்டாமா?.
இனி திருமாவளவன் காங்கிரசை விமர்சிக்ககூடாது. அப்படி விமர்சித்தால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமர்சிக்கட்டும் என்றார் கார்த்தி.
தனது பேச்ச்சின்போது திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பத்து முறைக்கு மேல் கார்த்தி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications