பெண்ணாகப் பிறந்ததால் சாய்னாவைப் பார்க்க மறுத்த பாட்டி

இதை சாய்னாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்துக் கிராமப்புறங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.
இதில் சாய்னாவின் பாட்டியும் விதி விலக்கு அல்ல. சாய்னா பிறந்தபோது பெண் குழந்தை பிறந்து விட்டதே என்று அதிருப்தி அடைந்து குழந்தை முகத்தை ஒரு மாதம் வரை பார்க்காமல் பிடிவாதமாக இருந்தாராம் சாய்னாவின் பாட்டி.
சாய்னா ஹரியாணாவைச் சேர்ந்தவர். தனது பாட்டி குறித்து இந்தியா டுடே இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது பெற்றோருக்கு முதல் குழந்தை பெண். எனது அக்காவான அவரது பெயர் சந்திரன்ஷு. அவர் பிறந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பிறந்தேன்.
2வதும் பெண்ணாகப் பிறந்து விட்டதே என்று அதிருப்தி அடைந்த எனது பாட்டி எனது முகத்தைக் கூடப் பார்க்கவில்லையாம். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை என் பக்கமே அவர் வரவில்லையாம். இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை எனது பிறப்பு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
இப்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான புறக்கணிப்பின் வீரியத்தை என்னால் உணர முடிகிறது.
எனது பாட்டிதான் இப்படி. ஆனால் எனது பெற்றோர் எனக்கு மிகுந்த சுதந்திரத்தைக் கொடுத்துள்ளனர். எனது துறையில் நான் சிறந்து விளங்க அவர்கள் அளித்து வரும் ஒத்துழைப்பு மகத்தானது. அதற்காக அவர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் சாய்னா
சாய்னா பாட்டி 'கருத்தம்மா பாட்டி' லெவலுக்குப் போகாமல் விட்டாரே, அதுவரைக்கும் சந்தோஷம்தான்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications