எஸ்.பி.யையே ஏமாற்றிய கில்லாடி இன்பார்மர்: ரூ. 5 லட்சம் மோசடி
திருவனந்தபுரம்: போதை மருந்து கடத்தல் பற்றிய ரகசிய தகவல் தருவதாகக் கூறி, எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிய போலீஸ் இன்பார்மரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் காசரக்கோட்டைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப். இவர் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டு வந்தார். ஏராளமான போதை மருந்து கடத்தல்காரர்கள் குறித்து போலீசார், சுங்கதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வந்தார். இதற்காக அவர் சன்மானமும் பெற்று வந்தார். ஆரம்பத்தில் சரியான தகவலை கொடுத்து வந்த அவர் பிறகு தவறான பல தகவல்களை கொடுத்தும் சன்மானம் வாங்கத் தொடங்கினார்.
போதை மருந்து கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தருவதாகக் கூறி கடந்த 2005-ம் ஆண்டு திருச்சூர் எஸ்.பி.யாக இருந்த விஜயனிடம் ரூ.5000 வாங்கிவிட்டு தலைமறைவாகி விட்டார்.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதிய போலீசார் ஷெரிபை கைது செய்து சாதாரண வழக்கு பதிவு செய்து விடுவித்தனர். அவரை பற்றி தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் பல போலீஸ் அதிகாரிகளிடமும், சுங்கத்துறை அதிகாரிகளிடமும் அவர் ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.
இது குறித்து கேரள காவல்துறை ஆணையர் சுப்பையன், திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அஜித்குமாரிடம் புகார் அளித்தார். இதன் பேரி்ல் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷெரீபை தேடி வருகின்றனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications