ராஜீவ் காந்தி பிறந்த மும்பை மருத்துவமனை இடிக்கப்படுகிறது
மும்பை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த மும்பை கம்பல்லா ஹில் மருத்துவமனை இடிக்கப்படவுள்ளது.
கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் உள்ளது இந்த மருத்துவமனை. நான்கு மாடிகள், 50 படுக்கை வசதிகளுடன் கூடியதாக தற்போது இது உள்ளது. மும்பையின் மிகப் பழமையான, பிரபலமான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. தற்போது இதை மிகப் பிரமாண்டமான மருத்துவமனையாக மாற்றவுள்ளனர்.
22 மாடிகளைக் கொண்ட, 220 படுக்கைகளுடன் கூடிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இது மாறவுள்ளது. மேலும் ஹெலிபேடும் இதில் இடம் பெறவுள்ளது. தெற்கு மும்பையில் ஹெலிபேட் வசதியுடன் கூடிய முதல் மருத்துவமனை என்ற பெயரும் இதன் மூலம் இந்த மருத்துவமனைக்குக் கிடைக்கும்.
மருத்துவமனை விரிவாக்கத்திற்கு அருகில் உள்ள நிலத்தையும் மருத்துவமனை உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். இன்னும் 6 மாதங்களில் இங்கு விரிவாக்கப் பணிகள் தொடங்கவுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை அறங்காவலர்களில் ஒருவரான விஜய் ஷெட்டி கூறுகையில், முதலில் 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கப்படும். பின்னர் தற்போது உள்ள மருத்துவமனை கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கும் என்றார்.
ராஜீவ் காந்தி இந்த மருத்துவமனையில்தான் பிறந்தார். இந்த மருத்துவமனைக்கு பெரும்பாலும் பெரும் பணக்காரர்கள்தான் வருவது வழக்கம். இருந்தாலும் ஏழைகளுக்கும் இந்த மருத்துவமனையில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கிறார்களாம்.
மேலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைச் செலவும் மிக மிக அதிகம். இதனால் ஏழைகளால் இந்த மருத்துவமனையைப் பற்றி நினைக்கக் கூட முடியாத நிலை உள்ளது. இதை விஜய் ஷெட்டியும் ஒத்துக் கொள்கிறார். அதேசமயம், மிக அதிக அளவில் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. நியாயமாகத்தான் வசூலிக்கிறோம். இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு 2 லட்சம் மட்டுமே வசூலிக்கிறோம் என்றார் ஷெட்டி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications