வங்கதேசம், மியான்மரைத் தாக்கியது கிரி புயல்
டாக்கா: வங்கக் கடலில் உருவாகியிருந்த கிரி புயல் வங்கதேசம் மற்றும் மியான்மரை இன்று தாக்கியது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் ஒரிசாவுக்கு 65 கிலோ மீட்டர் தொலைவில் வங்காளதேசம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருந்தது. அது மேலும் வலுவாகி புயல் சின்னமாக மாறியது. அதற்கு கிரி என பெயர் சூட்டினர்.
இந்த கிரி புயல் நேற்று இரவு மியான்மரைத்தாக்கியது. பின்னர் வங்கதேசத்தையும் அது தாக்கியது. மியான்மரின் தெற்குப் பகுதியான சிட்வே, வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் ஆகிய பகுதிகளில் புயலால் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எட்டு மீட்டர் உயரத்திற்கு மேல் அலைகள் எழும்பிவருகின்றன. செயின்ட் மார்ச்சின் தீவு, டெக்னாப் ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
புயலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களையும், ஏராளமான படகுகளையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கிரி புயலால் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மட்டும் காற்று பலமாக வீசும். வங்ககடலில் வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக சென்னை, எண்ணூர், நாகை, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 2 - ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
ஆனால், தமிழக மீனவர்கள் வழக்கம் போல் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications