தமிழக அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு கொலை மிரட்டல்-பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சென்னை மற்றும் நாகர்கோவில் வீடுகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் சுரேஷ் ராஜனை வெடிகுண்டு வைத்துக் கொல்லப் போவதாக எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார் அமைச்சர்.
இதையடுத்து சென்னை மற்றும் சொந்த ஊரான நாகர்கோவிலில் உள்ள சுரேஷ் ராஜன் வீடுகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ்.மிரட்டல் நாகர்கோவிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த எண்ணுக்குரியவரைப் பிடிக்க நாகர்கோவிலுக்கு சென்னையிலிருந்து தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications