சேகர்பாபுவைத் தொடர்ந்து வளர்மதியின் பதவியும் பறிப்பு

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்டங்களின் அ.தி.மு.க. பொறுப்பாளராக இருந்து வரும் பா.வளர்மதி இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்களின் பொறுப்பாளராக இருந்து வரும் பாலகங்கா எம்.பி. இன்று முதல் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்டங்களையும் சேர்த்து கவனிப்பார்.
தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏரல் ரமேஷ், துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் விஜயகுமார், தூத்துக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் சுரேஷ், துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் சண்முகவேல் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் விஜயகுமார், துணை செயலாளர் பொறுப்பில் ஏரல் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் சண்முகவேல், தூத்துக்குடி ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் பொறுப்பில் சுரேஷ் ஆகியோரும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
தொடர்ந்து மேலும் பல முக்கியத் தலைகள் உருளும் என அதிமுக வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.












Click it and Unblock the Notifications