இளைஞர் காங். தலைவர் ரூ. 6 லட்சத்துடன் கைது:சோனியா பேரணிக்கு கூட்டம் கூட்ட முயற்சி
பாட்னா: சோனியா காந்தி கலந்து கொள்ளும் பேரணிக்கு பணம் கொடுத்து கூட்டம் கூட்ட முயன்றதாகக் கூறி 2 காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. இன்று மூன்றாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதில் 48 தொகுதிகளில் வாக்குப்பதிவு
நடக்கிறது. இந்த தொகுதிகளில் தான் ராப்ரிதேவி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டுள்ளனர். இதனால் இன்று நடக்கும் வாக்குப்பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது.
கிழக்கு சம்பரான், மேற்கு சம்பரான் கோபால்கஞ்சி, சரன், வைசாலி மாவட்டங்களில் உள்ள இந்த தொகுதிகளில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட தொகுகள் உள்ளன. எனவே, இப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று ஒரு கோடியே 6 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.
இதற்கிடையில் இன்று பெகுசராயில் சோனியாவின் தேர்தல் பிரசார பேரணி நடப்பதாக இருந்தது. இதற்காக பணப் பட்டுவாடா செய்ய சில நிர்வாகிகள் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கினர். இந்த தகவல் அறிந்த போலீசார் அந்த ஹோட்டலில் திடீரென்று சோதனை நடத்தினர். இதில் அங்கு தங்கியிருந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாலன்குமார் மற்றும் சாகர் ரெய்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ. 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் செலவுக்காகத் தான் அவர்கள் பணம் வைத்திருந்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பணம் கொடுத்து பேரணிக்கு கூட்டம் கூட்ட முயன்றதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications