நாகர்கோவில் அருகே கெட்டுபோன அரிசியில் சத்துணவு: பட்டினி கிடந்த மாணவர்கள்
நாகர்கோவில்: கெட்டுப் போன அரிசியில் சமைத்த சத்துணவை மாணவர்கள் சாப்பிட முடியாமல் போனதால் அவர்கள் பட்டினி கிடக்க நேரிட்டது.
நாகர்கோவிலை அடுத்த விசுவாசபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 50 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில தினங்களாக கெட்டுபோன அரிசியில் சமைத்த உணவு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பள்ளிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அரிசியை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கெட்டு போன அரிசியிலேயே உணவு சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் குழந்தைகள் சாப்பிட முடியாமல் அந்த உணவை வாங்கி அப்படியே பள்ளியின் எதிரிலேயே கொட்டினர்.
இது பற்றி அறிந்ததும் திருமலை நகர் அதி்முக கிளை செயலாளர் முருகன், சகாயநகர் ஊராட்சி துணை தலைவர் முருகன் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்தனர். குழந்தைகளிடம் அந்த உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications