இந்தோனேஷியாவில் மீண்டும் எரிமலை வெடித்தது: பூகம்ப பலி 394-ஆக உயர்வு
ஜகர்தா: இந்தோனேசியாவில் மெராபி எரிமலை மீண்டும் வெடித்தது.
இந்தோனேசியாவில் கடந்த திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் இது வரை 394 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300 பேரைக் காணவில்லை. சாவு எண்ணிக்கை 600-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மர உச்சியில் மீட்கப்பட்ட குழந்தை:
சுனாமி பேரலையில் சிக்கி பல வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகினர். அவர் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சுனாமி அலையால் வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ஒன்று மரத்தின் உச்சியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. இதே போன்று மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனும் பத்திரமாக மீட்கப்பட்டான். ஆனால் அவன் பெற்றோர் பேரலையில் சிகக்கி உயிர் இழந்தனர்.
சுனாமிக்கு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கும்பல் கும்பலாக அடக்கம் செய்யப்படுகின்றது. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்நாட்டின் ஜாவா பகுதியில் உள்ள மௌன்ட் மெராபி எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் 34 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அந்த எரிமலை நேற்று மீண்டும் வெடித்து நெருப்புக் குழம்பைக் கக்கியது. இதையடுத்து இப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆசியான் நாடுகளின் கூட்டம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ள வியட்நாம் சென்றுள்ள இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பம்பாஸ் யுதோ யோனோ அங்கிருந்தே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார்.
கூட்டம் முடிந்தவுடன் தாயகம் திரும்பி இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் என்று அவரது செய்தி தொடர்பாளர் ஜூலி யன் பாஷா தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications