சென்னை-மதுரை ரயிலில் தீடீர் தீ : பயணிகள் அவதி
சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ரயிலில் திடீரென தீ பிடித்தது. இதனால் பயணிகள் யாருக்கும் எந்த வித சேதமும் ஏற்படவில்லை.
வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 10.45 மணி அளவில் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டது. ரயில் சிதம்பரம் அருகே சென்று கொண்டிருக்கையில் ஏசி பெட்டியின் பிரேக் தீ பிடித்தது. இதை கவனித்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு மிக்க கவனத்துடன் ரயிலை சிதம்பரம் வரை ஓட்டிச் சென்றார்.
அங்கு ஏசி பெட்டியின் பிரேக்கை ரயில்வே என்ஜினியர்கள் சரி செய்தனர். இதனால் ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டது. இந்த கால தாமதத்தால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இந்த ரயிலை எதிர்பார்த்து மயிலாடுதுரை போன்ற ரயில் நிலையங்களில் பயணிகள் நெடுநேரமாக காத்திருந்தனர்.
இதே போன்று தூத்துக்குடியில் இருந்து காட்பாடிக்கு புறப்பட்ட சரக்கு ரயில் விருத்தாசலம் அருகே தடம் புரண்டது. இதனால் அந்த ரயில் பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications