கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை-ரயில்வே ஊழியர்கள் 2 பேர் கைது
நெல்லை: நெல்லையில் கூடுதல் விலைக்கு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை விற்க முயன்ற ரயில்வே ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகை நவம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு ரயில், பேருந்துகளில் முன்பதிவு செய்து வருவதால் டிக்கெட்டுகள் காலியாகி விட்டன. இதையடுத்து தட்கல் டிக்கெட்டுகளை பெற மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் காலியாகி விடுகின்றன. முன்பதிவு டிக்கெட் மையங்களில் புரோக்கர்கள் முதல் நபராக இடம் பிடித்து போலி முகவரி, பெயர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். இதன் காரணமாக வரிசையில் காத்திருக்கும் பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
ரயில் டிக்கெட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியை பயன்படுத்தி கள்ள மார்க்கெட்டில் டிக்கெட்டுகளை புரோக்கர்கள் கூடுதல் விலைக்கு சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு பல தரப்பி்ல் இருந்தும் புகார்கள் குவிந்தன. இதையடுத்து நெல்லை ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 ஊழியர்கள் வரிசையில் காத்திருந்து தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
அவர்களைப் பிடித்து விசாரித்த போது இருவரும் நெல்லை ரயில் நிலையத்தில் பாயிண்ட் மேன், லோகோ செட் பிரிவில் பணியாற்றி வரும் பீட்டர், ஜீவா என்பதும், கூடுதல் விலைக்கு விற்பதற்காக நெல்லையில் இருந்து சென்னைக்கு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலீசார் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது போலீஸ் பிடியில் இருந்து பீட்டர் தப்பி ஓடினார். இதை பார்த்த போலீசார் வாக்கி டாக்கியில் டிக்கெட் கவுண்டரில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பீட்டரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications