கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள்: நாளை முதல் முன்பதிவு!

Subscribe to Oneindia Tamil

Train
சென்னை: பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு கூடுதல் வசதியை அளிக்கும் வகையில் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து நாகர்கோவில், திருச்சி, திருவனந்தபுரம், கொல்லம், பெங்களூர், கொச்சி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அவற்றின் விவரம்:

எண்.06007 சிறப்பு ரெயில்:

சென்ட்ரலில் இருந்து நாகர் கோவிலுக்கு செல்லும் இந்த ரெயில், இரவு 7.30 மணிக்கு சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோயில் போய் சேரும். நவம்பர் 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29 மற்றும் ஜனவரி மாதம் 5, 12, 19 ஆகிய தேதிகளில் புறப்பட்டு செல்கிறது.

எண்.06008 ரெயில் நாகர்கோவிலிலிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சென்ட்ரல் வருகிறது. நவம்பர் 18, 25, டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் புறப்படும்.

எண்.06304 சிறப்பு ரெயில்:

நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு காலை 6 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது. நவம்பர் 14, 21, 28, டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது.

எண்.06303 ரெயில் எழும்பூரில் இருந்து பிற்பகல் பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு நாகர்கோவில் போய் சேருகிறது. நவம்பர் 15, 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27 மற்றும் ஜனவரி 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் விடப்படுகிறது.

எண்.06802 சிறப்பு ரெயில்:

திருச்சி-எழும்பூர் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது. நவம்பர் 15, 22, டிசம்பர் 6, 13, 20, 27 மற்றும் ஜனவரி மாதம் 3, 10, 17, 24 ஆகிய நாட்களில் விடப்படுகிறது.

எண்.06801 சிறப்பு ரெயில் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு விடப்படுகிறது. எழும்பூரில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு காலை 6 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. இந்த ரெயில் நவம்பர் 18, 25, டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் புறப்பட்டு செல்கிறது.

எண்.06803 சிறப்பு ரெயில்:

எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மாலை 6.50 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு நாகர்கோவில் போய் சேருகிறது. இந்த ரெயில் நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7, 14, 21, 28 மற்றும் ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் விடப்படுகிறது.

எண்.06804 நாகர்கோவில்- எழும்பூர் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. பகல் 1.30 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரெயில் நவம்பர் 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது.

எண்.0675 சிறப்பு ரெயில்:

வாஸ் கோடகாமாவில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினத்திற்கு மறுநாள் இரவு 7.15 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் நவம்பர் 1, 8, 15, 22, 29 தேதியில் இயக்கப்படுகிறது.

எண்.0676 ரெயில் நாகப்பட்டினத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு வாஸ்கோடாகாமாவை சென்றடைகிறது.

எண்.06301 சிறப்பு ரெயில்:

நாகர்கோவிலில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு மங்களூர் ஜங்சன் சென்றடைகிறது. இந்த ரெயில் டிசம்பர் 20, 27, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

எண்.06302 சிறப்பு ரெயில் மங்களூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் டிசம்பர் 21, 28, ஜனவரி 4, 11 ஆகிய தேதிகளில் விடப்படுகிறது.

சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய நாளை (31-ந்தேதி) முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+