ஜனவரியில்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்-டாக்டர் ராமதாஸ்
விருதுநகர்: சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி மாதத்தில்தான் முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
விருதுநகரில் பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முல்லைப்பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்சினைகளில் தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. நமக்கு உள்ள உரிமை பறிக்கப்பட்டு உள்ளது. 1968-ம் ஆண்டு முதல் 42 ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்சினையை தீர்க்க இன்று வரை முடியவில்லை. உலகில் நீண்டகாலமாக தீர்க்க முடியாத பிரச்சினையாக இது உள்ளது.
இதற்கு முன்பு 32 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காண முடியவில்லை. 1991-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பும், 2008-ல் இறுதி தீர்ப்பும் கிடைத்தபோதும் இன்றும் இந்த பிரச்சினை அந்தரத்தில் தொங்கி வருகிறது.
1965-க்கு பிறகு போராட்ட குணத்தை நாம் இழந்து விட்டோம். நம்மிடம் ஒற்றுமை இல்லை. தென் மாவட்டங்களில் மழையை நம்பி விவசாயம் உள்ளது. இதற்கு கேரளாவில் உள்ள பம்பா அச்சங்கோவில் நதியை திருப்பிவிட்டால் விவசாயம் வளம் அடையும்.
விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க போராடி வருகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் முடிவு செய்யப்படும்.
தென் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சி அடைய ஒவ்வொரு பகுதியிலும் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம் என்றார் அவர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications