ஆந்திர தினக் கொண்டாட்டத்தில் வன்முறை-ரோசய்யா கார் மீது தெலுங்கானா மாணவர்கள் தாக்குதல்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட தினம் இன்று ஆந்திரா முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆனால் தெலுங்கானா பகுதியில் இதை எதிர்த்து நடந்த போராட்டங்களால் வன்முறை வெடித்தது.
ஹைதராபாத்தில், உள்துறை அமைச்சர் கீதா ரெட்டியின் வீட்டை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தாக்கினர். கற்கள் வீசப்பட்டன.
அதேபோல முதல்வர் ரோசய்யா வீட்டுக்குள் நேற்று புகுந்து தாக்குதல் நடத்த தெலுங்கானா போராட்டக்காரர்கள் முயன்றனர். இன்று அவரது கார் அணிவகுப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று ஹைதராபாத் தரம் கரம் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். போலீஸ் தடுப்புகளை மீறி உள்ளே புக முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை தடுத்து தடியடிநடத்திக் கலைத்தனர். 15 பேர் கைது செய்யபப்பட்டனர்.
அதேபோல அமைச்சர்கள் குடியிருக்கும் குடியிருப்புகளுக்குள்ளும் போராட்டக்காரர்கள் புக முயன்றதால் பரபரப்பு அதிகரித்தது. இருப்பினும் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இன்றைய தினத்தை தெலுங்கானா பகுதியில் துரோக தினமாக தெலுங்கானா போராட்டக்காரர்கள் அனுசரித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications