ரூ 15 கோடியில் சுய உதவிக்குழு பொருள் விற்பனை வளாகம்!
சென்னை: சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பதற்கென்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ 15 கோடியில் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் கருணாநிதி.
சுயஉதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதற்கு மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் வணிக வளாகங்கள் கட்ட நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் ரூ.15 கோடியே 33 லட்சம் செலவில் புதிதாக ஒரு வளாகம் கட்டப்பட்டுள்ளது.
அன்னை தெரசா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நினைவாக இக்கட்டடத்துக்கு 'அன்னை தெரசா மகளிர் வளாகம்' என பெயர் சூட்டியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடும் வகையில் நிரந்தர விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மகளிர் மேம்பாட்டிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் இயங்கி வரும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம், திட்ட அலுவலகம் ஆகியவை இந்த வளாகத்தில் செயல்பட உள்ளன.
அன்னை தெரசா மகளிர் வளாக திறப்பு விழா இன்று மாலை 5 மணியளவில் நுங்கம்பாக்கம் மகளிர் வளாகத்தில் நடக்கிறது.
விழாவிற்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதல்வர் கருணாநிதி மகளிர் வளாகத்தை திறந்து வைக்கிறார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications