2 லட்சம் அரசுக் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப கோரிக்கை
நெல்லை: தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி வருமாறு,
தமிழக அரசு நியமித்த ஒருநபர் குழு அறிக்கையில் சில குறைபாடுகள் உள்ளன. மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதம் பெறாத நிலை தமிழகத்தில் சில பிரிவு பணியாளர்களுக்கு உள்ளது.
செவிலியர்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றியது போல் பாதிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆய்வக உதவியாளர்கள், உதவி புள்ளியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கையையும் மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். சாலை பணியாளர்களை செமி ஸ்கில்டு நிலைக்கு உயர்த்தி உயர் ஊதிய விகிதம் வழங்க அரசு உத்தரவி்ட்டும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
ஊதிய விகித குறைபாடுகளை அரசு தீர்ப்பதோடு மத்திய அரசுக்கு இணையான வீட்டு வாடகை, கல்வி, போக்குவரத்து படிகளை வழங்க முன் வரவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம பணியாளர்கள், ஊராட்சி உதவியாளர்களுக்கு நி்ரந்தர கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு விடுப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். மருத்துவம், பொது சுகாதார துறை ஊழியர்களுக்கு 10 மாதமாக ஊதியம் வழங்காத நிலை உள்ளது. உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. உடனடியாக இவற்றை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications