சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடர்-நாளை தொடக்கம்
சென்னை: சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய சட்டமன்ற வளாகத்தில் நடக்கும் இக் கூட்டத் தொடரின்போது, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் எந்தெந்த நுழைவு வாயில் வழியாக வந்து செல்ல வேண்டும் என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா, சட்டப்பேரவைக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அண்ணா சாலை பெரியார் சிலை அருகே உள்ள வாயில் வழியாக பேரவைக்குள் வரலாம்.
எம்எல்ஏக்கள், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் ஆகியோர் சிவானந்தா சாலையில் உள்ள வாயில் வழியாக நுழைந்து வரலாம்.
ராஜாஜி மண்டபத்தின் பின்புறம் உள்ள இடத்தில் அவர்களது வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்களின் வாகன அனுமதி அட்டையை செயலாளர் அறையிலும், உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள செயலகப் பிரிவுகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
சட்டப்பேரவை உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ள உறுப்பினர்கள், இந்தியன் வங்கி அருகேயுள்ள வாயில் வழியாக பேரவைக்குள் வரலாம்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளை பார்க்க வரும் பொதுமக்கள், அண்ணா சிலைக்கு அருகில் உள்ள வாலாஜா சாலை சட்டப்பேரவை வாயில் வழியாக உள்ளே வர வேண்டும்.
அவர்களுக்கான நுழைவு அனுமதிச் சீட்டு, சட்டப்பேரவை பொதுமக்கள் வளாகத்தின் முன் வாயிலிலே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவைச் செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இக் கூட்டத் தொடரில் சட்டம் ஒழுங்கு, விலைவாசி, குழந்தைகள் கடத்தல் ஆகிய பிரச்சனைகளை எதிர்க் கட்சிகள் கிளப்பவுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications