மல்லிகை பூ விலை கடும் உயர்வு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வரலாறு காணாத அளவுக்கு மல்லிகைப் பூவின் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.1000க்கு விற்பனையானது. தீபாவளி வரையில் கிலோ ரூ.600 வரை விற்பனையானது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால் மல்லிகைப் பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை-ராமநாதபுரம், தேனி-தோவாளைக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. இங்கு சாகுபடியாகும் மல்லி, பிச்சி, கனகாம்பரம், கேந்தி, சம்பங்கி, கொண்டை, ரோஸ், காக்கட்டன் ரக பூக்கள் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் அருகே பூ மொத்த விற்பனை கமிஷன் கடைகள் அமைந்துள்ளன. தற்போது இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் குளங்கள் வறண்டு விட்டதுடன் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் தண்ணீரின்றி விவசாயிகள் மலர் சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர். எனவே சமீபகாலமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு முன்பு முகூர்த்த காலங்களில் மட்டும் உயர்ந்த பூக்களின் விலை தற்போது சாதாரண நாட்களிலும் ஏறுமுகத்திலேயே உள்ளது. நவராத்திரி விழா மற்றும் தீபாவளியின்போது பூக்கள் விலை சற்று உயர்ந்தது. தீபாவளி வரையில் மல்லிகை கிலோ ரூ.600க்கு விற்றது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் பூ மார்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்து மிகவும் குறைந்தது. வரத்து குறைவாலும் தேவை அதிகமாக இருந்ததாலும் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1000க்கு விற்பனையானது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications