பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்: பாராமுகத்தில் பள்ளி நிர்வாகம்
புதுக்கடை: பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் பள்ளி நிர்வாகம் அமைதியாக இருப்பது பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அனந்தமங்கலம் என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இங்கு பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
ஏதாவது ஒரு பொருளை கீழே போட்டுவிட்டு மாணவியை எடுக்க சொல்வாராம். குனி்ந்து எடுக்கும்போது அவர் அந்த மாணவியை பிடித்து தூக்கி விடுவாராம். இது தவிர பல்வேறு சில்மிஷ வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாராம். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியரை விசாரித்தபோது தான் மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் நடந்து கொள்வதால் இதை பிடிக்காத மாணவிகள் தன்மீது அபாண்டமாக பழி போடுகிறார்கள் என்று கூறி தப்பியுள்ளார்.
கடந்த 3 தினங்களுக்கு முன் மேலும் 2 மாணவிகளிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு உள்ளார். பதறிப் போன மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
பெற்றோர்கள் மீண்டும் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி போலீசில் புகார் செய்ய நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நலன் கருதி மவுனமாக உள்ளனர். ஆசிரியரின் இந்த சில்மிஷம் அந்த பகுதி பொதுமக்களுக்கும் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியள்ளனர். யாரும் புகார் செய்யாததால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications