பஞ்சு, நூல் விலை உயர்வு: காலவரையற்ற போராட்டத்திற்கு தயாராகும் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள்

கடந்த ஓராண்டு காலமாக பஞ்சு, நூல் விலை கடுமையாக உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி ஒரு கேண்டி பஞ்சு விலை 23 ஆயிரம் ரூபாயாகவும், நூல் விலை 139 ரூபாயாகவும் இருந்தது.
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி ஒரு கேண்டி பஞ்சு விலை 33 ஆயிரத்து 200 ரூபாயாகவும், நூல் விலை 190 ரூபாயாகவும் உயர்ந்துவிட்டது.
இந்த விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சனை குறித்து அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், பஞ்சு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, ஒரு கேண்டி பஞ்சு ரூ. 44 ஆயிரம் வரை சென்றது. இதனால் நூல் விலையும் கடந்த ஒரே மாதத்தில் ரூ. 76 உயர்ந்துள்ளது.
இதையடுத்து விரைவில் திருப்பூர் ஆலைகள் விலை உயர்வை குறைக்கக்கோரி காலவறையற்ற போராட்டத்தில் குதிக்கவிருப்பதாகக் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications