கிழக்கு அரபிக் கடலில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை-தமிழகத்தில் மழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிழக்கு அரபிக் கடலில் ஒரு தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால்,அதன் விளைவாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,
சென்னை அருகே வங்கக் கடலில் உருவான ஜல் புயல், இப்போது கிழக்கு அரபிக் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது, தமிழகத்தை நோக்கி ஈரம் மிகுந்த காற்றை இழுக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றார்.
தலைநகர் சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டுத் தூறல் மழை பெய்துவருகிறது. சில இடங்களில் லேசான மழை காணப்பட்டது.












Click it and Unblock the Notifications