திருப்பதியில் இலவசத் தரிசனத்துக்கு கணினி ஐடி: காத்துக் கிடக்கத் தேவையில்லை
திருப்பதி: திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் பெறவிரும்புவோருக்கு கணினி அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் கோவில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் ரூ. 50, ரூ. 300 என கட்டணம் செலுத்தி சாமியை தரிசிக்கின்றனர். இலவச தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வைகுண்டம் 2-வது வரிசையில் காத்துக் கிடந்து தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் பலர் இலவச தரிசன வரிசையில் செல்கின்றனர். இதனால் அவர்கள் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்தால் தான் சாமியைத் தரிசிக்க முடிகிறது. பக்தர்கள் இவ்வாறு காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு அன்மையில் திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதி அட்டை வழங்கத் துவங்கியுள்ளது.
அதன்படி பக்தர்களின் புகைப்படம், கை ரேகை ஆகியவை கணினியில் பதிவு செய்யப்பட்டு தரிசனத்திற்கான நேரம் குறிப்பிடப்பட்ட அட்டை வழங்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் வரிசையில் நின்று காத்துக்கிடக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால் தசரிசனம் செய்யலாம்.
இது குறித்து திருமலை திருப்பதி முதன்மை செயல் அலுவலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணாராவ் கூறியதாவது,
சாதாரண பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் காத்துக்கிடக்கும் நேரத்தை குறைக்கும் பொருட்டு இம்முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களிடம் இன்னும் இத்திட்டம் குறித்த போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்த நல்ல திட்டத்தை பக்தர்கள் இனியாவது பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications